குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
அதேபோல கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலிலும் அனைத்துக் கட்சிக்
கூட்டமைப்பு சார்பில் கடந்த 12 நாள்களாகப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பெரும்பாலான இஸ்லாமிய சமுதாய மக்கள் பங்கெடுத்து
வருகின்றனர்.

இந்நிலையில்
அதேபகுதியில் வேறோர் இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த ரத்ததான
முகாமுக்குச் சென்ற போராட்டத்திலிருந்த இஸ்லாமியர்கள்,`நாங்கள் அனைவரும்
ரத்ததானம் செய்கிறோம்.
எங்களின் போராட்டக் கூடாரத்துக்கு வாருங்கள்' என்று
மருத்துவர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு, `அங்கெல்லாம் வர
முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் இங்கே வந்து ரத்ததானம் கொடுக்கலாம்'
என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்கு
சம்மதித்து அங்கேயே சென்று இஸ்லாமியர்கள், ரத்தம் வழங்க இருந்த நிலையில்,
திடீரென ரத்ததான முகாமை ரத்துசெய்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து
கிளம்பியிருக்கின்றனர் மருத்துவர்கள். மாவட்ட நிர்வாகம் கொடுத்த
அழுத்தத்தின் காரணமாகவே ரத்ததான முகாம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக்
குற்றம்சாட்டுகிறார்கள் போராட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள்.
குடியுரிமை
சட்டத் திருத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் அனைத்துக்
கட்சிக் கூட்டமைப்பு தலைவர் ஹாரிஸ், ``குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு
எதிராகக் கடந்த 12 நாள்களாக நாங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
எங்கள் அமைப்பில் இருக்கும் அனைவரும் 6 மாத்திற்கு ஒருமுறை ரத்ததானம்
செய்வோம்.
அதனடிப்படையில் காட்டுமன்னார்கோவில் அரசு
மருத்துவமனையிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட மருத்துவர்கள், மருத்துவமனை
ரத்த வங்கியில் ரத்த இருப்பு இல்லை என்றும், `நீங்கள் ரத்தம் கொடுக்க
முடியுமா?' என்று கேட்டனர். அதற்கு, `நாங்கள் கண்டிப்பாகத் தருகிறோம்.
ஆனால் நாங்கள் போராட்டத்தில் இருக்கிறோம். அங்கு வந்து பெற்றுக்கொள்ள
முடியுமா?' என்று கேட்டோம்.
இஸ்லாமியர்கள் போராட்டம்
அதற்கு, `சரி'
என்று கூறிய மருத்துவர்கள் போராட்டக் கூடாரத்தில் ரத்ததானம் பெறுவதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர். நாங்களும் சுமார் 100 பேர் வரை ரத்ததானம் வழங்கத்
தயாராக இருந்தோம்.
ஆனால்,
அதற்குக் காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. அதனால், எங்கள் கடைகளில்
ரத்ததான முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால், அங்கும்
ரத்ததானம் செய்யக் கூடாது என்று தடுத்தனர் காவல்துறையினர். சிறிது
நேரத்தில் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து மருத்துவர்கள்
அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டார்கள். அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே,
இந்த ரத்ததான முகாம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால்
பாதிக்கப்படப் போவது முகம் தெரியாத எங்களின் உடன்பிறவா சகோதரர்கள்தான்.
ரத்தத்திலும் எங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டுமா" என்றார் ஆதங்கமாக.
இதுகுறித்து
விளக்கம் கேட்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனிடம் பேசினோம்.
``போராட்டத்தில் இருப்பவர்கள் உடல் ரீதியாகச் சோர்வடைந்து இருப்பார்கள்.
உணவருந்தாமல் கூட இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால்தான் மருத்துவர்கள்
முடிவெடுத்து ரத்ததான முகாமை ரத்து செய்துவிட்டார்கள்" என்பதோடு
முடித்துக்கொண்டார்.

No comments:
Post a Comment