
டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த
ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில்
கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார்.
குடியுரிமை
திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்)
ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம்
முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக
என்பிஆர் குறித்து அஸ்ஸாமில் கேட்கப்பட்ட ஆவணங்களாக தந்தையின் பிறந்த நாள்
சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் இந்திய குடிமகன்கள் தானான என்பதை நிரூபிக்க
கேட்கப்பபட்ட வாக்குரிமை ஆவணங்கள் உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியது.
அத்துடன் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றால் முகாம்களில்
அடைக்கப்படுவோமோ என்ற பயமும் பீதியும் பெரிய அளவில் பரவியதால் என்பிஆர்
விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்புக்கு வித்திட்டுள்ளது.
இதனால்
என்பிஆர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்
நாடு முழுவதும் வேகமாக பரவின. இந்த போராட்டம் இன்று வரை பல்வேறு இடங்களில்
நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் காங்கிரஸ் மூத்த எம்பி
கபில் சிபல் CAA NPR உடன் இணைந்தால் என்ன ஆகும் என என்பிஆர் குறித்து
கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா
பேசுகையில் , NPR இன் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது. எந்த ஆவணங்களும்
அளிக்க தேவையில்லை. எனவே யாரும் பயப்பட வேண்டாம். ஒருவர் குறிப்பிட்ட
தகவல்களை வழங்க விரும்பவில்லை என்றால், எந்த கேள்வியும் கேட்கப்படமாட்டாது,
சிஏஏ குறித்து முஸ்லீம் சகோதர சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம்
செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்"
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment