
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் பேரை தனித்து
வைப்பதற்காக நாடுமுழுவதும் உள்ள தங்கள் இடங்களை தரத் தயாராக இருப்பதாக
ஜமாயத் உலேமா இ ஹிந்த் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
கரோனா
வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின்
அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை
விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு
மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து
உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து
வருகின்றனர்.
கடைகளுக்கு முன்பு உரிய வகையில் மக்கள் இடைவெளி
விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில்
வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா
வேகமாக பரவி வரும்நிலையில் தொற்று இருப்பவர்களாக சந்தேதிக்கப்படுவர்களை
தனிமைப்படுத்தி வைப்பதற்காக அரசுக்கு சொந்தமான இடங்கள் தவிர பல
தனியார்களும் தங்கள் இடங்களை தருவதாக அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில்
ஜமாயத் உலேமா இ ஹிந்த் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் பேரை தனித்து
வைப்பதற்காக நாடுமுழுவதும் உள்ள தங்கள் இடங்களை தரத் தயாராக இருப்பதாகவும்,
அந்த இடங்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் பகுதிகளை
ஏற்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment