
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு
அதிகரித்து வருவதால் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் பாதிப்பு
எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் அவசரநிலை மீண்டும் அறிவிக்கப்பட கூடும்
என்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இதுபற்றி
இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், சமூக ஊடகங்களில், ஏப்ரல்
மாதத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்றும் உள்ளாட்சி
நிர்வாகத்திற்கு உதவியாக இந்திய ராணுவம், என்.சி.சி.
மற்றும் என்.எஸ்.எஸ். படையினர் பணியமர்த்தப்படுவார்கள்
என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகள் அனைத்தும்
முற்றிலும் போலியானவை. இதனை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவித்து
உள்ளது.
newstm.in
No comments:
Post a Comment