Latest News

  

கொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு கிராம நுழைவாயிலில் செக்போஸ்ட் அமைத்து மக்கள் கண்காணிப்பு

தஞ்சை : தஞ்சாவூர் அருகே கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கிராமம் ஒன்றின் நுழைவாயில்களில் செக் போஸ்ட் அமைத்து அதில் இரண்டு பேர் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், யார் ஊருக்குள் வந்தாலும் மஞ்சள், வேப்பிலை, டெட்டால் கலந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளை சுத்தமாக கழுவிய பிறகே ஊருக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 வீடுகள் உள்ளன. விவசாயிகள் நிறைந்த இந்த கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊருக்குள் வரும் நபர்களிடம் எப்படி இருந்தால் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்றும் எடுத்து கூறி அசத்துகின்றனர். இது குறித்து காசவளநாடு புதூர் மக்கள் கூறுகையில், உலகை அச்சுறுத்திய கொரோனா தற்போது தமிழகத்தை மிரட்டி வருகிறது.இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களாகிய நாம் அதற்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் நாம் இருக்கலாம். அந்த வகையில் எங்க ஊரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கொரோனா பரவாமல் காக்கும் செயல்களை செய்ய முடிவெடுத்தோம்.அதன் படி முதலில் எங்க ஊரில் உள்ள நான்கு நுழைவாயில்களில் செக்போஸ்ட் அமைத்து அதில் எப்போதும் 2 பேர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அத்துடன் செக்போஸ்டிலேயே மஞ்சள், வேப்பிலை,டெட்டால் கலந்த தண்ணீரை வைத்து எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் வெளியே சென்று வந்தாலும் அல்லது வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு வருபவர்களாக இருந்தாலும் அந்த தண்ணீரில் கைகளை சுத்தமாக கழுவிய பிறகு மாஸ்க் அணிந்து கொண்டுதான் உள்ளே செல்ல அனுமதித்து வருகிறோம். வெளியூரில் இருந்து வரும் நபர்களிடம் எதற்காக இங்கு வர்றீங்க யார் வீட்டுக்கு போறீங்க என்கிற விபரத்தை கேட்டு அவர்களின் முகவரி மற்றும் செல் நம்பர் ஆகியவற்றையும் அறிந்து நோட்டில் குறித்து வைக்கப்படுகிறது. எங்க ஊரை சேர்ந்த இளைஞர்கள் ஊரின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் தன்னலத்தோடு ஆர்வமுடன் இதனை செய்து வருகின்றனர். எந்த பிரச்னையாக இருந்தாலும் வரும் முன் காப்பதுதான் சிறந்த தீர்வு வந்த பின் புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.

அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டை ஊரடங்கு கடைபிடிக்கபட்ட நாளில் இருந்து செய்து வருகிறோம் என்றனர். பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டம் கொரானோ பரவலை தடுக்க நாவலூர் கிராமம் முழுக்க வேப்பிலையை வீட்டு வாசல்களில் மக்கள் தோரணமாகக் கட்டி தொங்க விட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பர வல் இந்தியாவிலும், தமிழகத்திலும் ஊடுவியுள் ளது உறுதி செய்யப் பட்டு ள்ளது. இந்நிலையில் கொரோனோ நோயை விரட்ட மாரியம்மனை வேண்டி பெரம்பலூர் மாவ ட்டத்தில் அய்யலூர் கிராமத்திற்கு அடுத்தபடியாக நாவலூர் கிராமம் முழுவதும் வீட்டு வாசல்களில் வேப்பிலைத் தோரணங்களைப் பொதுமக்கள் கட்டியுள்ளனர்.

ஏற்கனவே சிலதினங்களுக்கு முன்பே சிறுவாச்சூர் அருகேயுள்ள அய்யலூர் கிராமத்தில் பெரும்பாலா ன வீடுகளில் வேப்பிலை யைக் கட்டித் தொங்கவிட் டது போல், நேற்று மேலப்பு லியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் வாசல்கதவுகளில் வேப்பிலை க்கொத்து சொருகியும், வே ப்பிலைத் தோரணம் கட்டி யும் காணப்படுகிறது. மேலும் வீடுகளில் இயற்கை கிருமி நாசினியான மஞ்சள் கலந்த தண்ணீர் கைகளைக் கழுவ வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.