
கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,
27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் 2-வது கட்டத்தில்
இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை 3-வது நிலையான சமூக பரவலை எட்டாமல்
இருக்க, மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக,
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 144 தடை உத்தரவை
பிறப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை
பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனால், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக்கும்
நேரக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றன.
ஊரடங்கு தடை காலம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது,
வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை வசூலிக்க
வேண்டாம் என்றும், வீட்டை காலி செய்ய வற்புறுத்தவும் கூடாது என மத்திய
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
டெல்லியில்
இருந்து தனது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பவர்களை இரு வாரங்களுக்கு
தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்க வேண்டும். பேரழிவு மேலாண்மை
சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, முதலாளிகள் தங்களது
தொழிலாளர்களின் ஊதியத்தை சரியான தேதிகளில் கொடுக்க வேண்டும்.
நில
உரிமையாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து மாத வாடகை
கேட்கக் கூடாது. மேலும், குத்தகை முறையில் இருப்பவர்களை வெளியேற்றுவோர்
மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தார்.
Newstm.in
No comments:
Post a Comment