
வர்ணாசிரம தர்மத்தைப் போதிக்கும் மேட்டுக்குடி பத்திரிகையான தினமலர்,
இன்று ஒரு கருத்துப்படம் மூலம், தீண்டாமையை வலியுறுத்துகிறது என்று
அதிர்ச்சி அடைகிறார் ஓர் இந்திய அதிகாரி. இதோ அவரது பதிவு.
இதை முதலில்
போலிச்செய்தி என்றே நினைத்தேன். சாதிய, ஆணாதிக்க வன்மங்களை அவ்வப்போது
வெளிக்காட்டினாலும் இவ்வளவு தினமலர் தரந்தாழ்ந்து நடந்து கொள்ளும் என
எதிர்பார்த்திருக்கவில்லை. திருச்சி பதிப்பைக் கண்டதும் இப்படி ஒரு
கார்ட்டூன் உண்மை எனப் புரிந்தது. அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையைப்
பின்பற்றுவதைத் தடை செய்கிறது.
தீண்டாமை
ஒழிப்பிற்கு என்று பல்வேறு சட்டங்கள் இதையொட்டியே இயற்றப்பட்டுள்ளன. சாதி
ஒழிப்பு என்கிற நோயைத் தாக்காமல் தீண்டாமை என்கிற அறிகுறியைத் தாக்குவதே
போதுமானதில்லை தான்.
கொரோனா காலத்தில் தீண்டாமை எனும் இழிவான அநீதிக்கு
மருத்துவப்போர்வை போர்த்துகிற வேலையைப் பலரும் செய்கிறார்கள். நிதானமாகவே
எதிர்கொள்வோம்.
மருத்துவத்தொழில் அருவருக்கத்தக்கது, பிறரைத் தொட்டு
நோயைத் தீர்க்கல் ஆகாது என்கிற கருத்து வர்ணாசிரமத்தின் அடிப்படை. நோய்,
வறுமை, பிணிகள் என எல்லாவற்றுக்கும் கர்மாவின் கணக்கில் எழுதுவது தானே
உங்களின் தர்மம்? இப்போது கொரோனாவிற்கான Social distancing (சமூக விலகல்) ஐ
அப்பவே சொன்னோமில்லயா நாங்க என உரிமை கொண்டாடுகிறார்கள்.
இந்தப்
புத்தம் புதிய அறிவியல் பாய்ச்சல்களின் மீது சற்றுகூட வெட்கமே இல்லாமல்
'வேத/சமஸ்கிருத ஸ்டிக்கர்' ஒட்டுவது ஒன்றும் புதிதல்ல. நோய்க்கிருமி என்பதே
சமீபத்திய பாய்ச்சல். நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ளக் கை கழுவ
வேண்டும் என்பது இக்னஸ் செமல்வேய்ஸ் எனும் மருத்துவர் உயிரைக்கொடுத்துக்
கொண்டு வந்த வழக்கம்.
நீங்கள் மனிதர்களைத் தொடவே கூடாது எனப்
பிறப்பின் அடிப்படையில் விலக்கி வைத்தீர்கள். வர்ணம் பார்த்தா வியாதி
வருகிறது? மானுட மேன்மையைத் தடுத்ததோடு ஜீன் பன்மையைத் தடுத்த அகமண முறை
எந்த வகையிலும் அறிவியல், அறிவு அடிப்படையிலானது கிடையாது.
இந்த
வேற்றாள் என்கிற பதம் சாதிய வன்மம் தானே? உங்கள் வீட்டிலும் நோய்த்தொற்று
இருப்பவர்கள் இருக்கலாமில்லையா? மேலபட்டா என்பது மானுடத்தீண்டலை இழிவானதாக,
அருவருக்கத்தக்கதாகப் பார்த்த ஆதிக்கப் பார்வையின் நீட்சி தானே? சைவம்
உயர்வு, அசைவம் தாழ்வு என்கிற உணவரசியலின் வேறு வடிவம் தானே கண்டதை
சாப்பிடாதீங்கோ? அதென்ன தீண்டாமை தேவைப்படறதேண்ணா?! கொரோனா எனும்
கொடும்நோய் காலத்தில் கூட உங்கள் அடக்குமுறை வக்கிரத்தை பரப்ப வேண்டுமா?
சமூக
விலக்கல் என்கிற பதத்தைவிட physical distancing சரியாக இருக்குமெனத்
தோன்றுகிறது. எல்லாரிடம் இருந்தும் சமமாக விலகி இருப்பது physical
distancing. தமிழில் பொது விலகல் என அழைக்கலாம்.
உங்களின் சமூக/சாதி
விலக்கல் உங்கள் உழைக்காமல், பிறப்பால் உயர்வான வர்ணம் தனி, பிற வர்ணங்கள்
தனி என விலக்கி வைக்கும் பிறப்பின் அடிப்படையிலான அவலம். பதங்களின் அரசியலை
உங்களின் அடக்குமுறையை நியாயப்படுத்த பயன்படுத்துவது சாவு வீட்டிலும்
பிடுங்கின மட்டும் லாபம் வகைதான். கண்டனங்கள்.
No comments:
Post a Comment