
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து 51 கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்
மாவட்ட சிறையில் 220க்கும் மேற்பட்ட கைதிகளை சிறை வைப்பதற்கான வசதிகள்
உள்ளன. இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 191 பேர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக, சிறைச் சாலையில்
உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் பரோலில் விடுவிக்கலாம் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி,
திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 191 பேரில் 51 கைதிகளை
பரோலில் விடுவிக்க மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா உத்தரவிட்டார்.
இதனை அடுத்து 51 கைதிகள் செவ்வாய்க்கிழமை பரோலில்
விடுவிக்கப்பட்டனர். இந்த 51 பேரும் ஏப்ரல் 15ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட
முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை நீதிபதி
எம்.கே.ஜமுனா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment