வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை நாராயணசாமி தோப்பு
பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் திவாகர் (18). சுண்ணாம்புபேட்டை
பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (22). இந்த இரண்டு இளைஞர்களும்
'கொரோனா' வைரஸால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த சனிக்கிழமை தகவல் பரவியது.

அதற்குக்
காரணம், அவர்களின் புகைப்படங்களைச் செய்தி தொலைக்காட்சியில் 'பிரேக்கிங்'
நியூஸ் வெளியிட்டுள்ளதைப் போன்று காண்பித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில்
வைரலாக்கியதுதான்.
சம்பந்தப்பட்ட அந்த இளைஞர்களின் உறவினர்களும் நண்பர்களும்
பதறிப்போய் அவர்களுக்குப் போன் செய்து நலம் விசாரித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த
இளைஞர்கள், இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக குடியாத்தம்
நகரக் காவல் நிலையத்துக்குச் சென்று தனித் தனி புகார் கொடுத்தனர். அந்த
வீடியோவில், குடியாத்தம் அரசு மருத்துவமனையின் பெயரையும்
பயன்படுத்தியிருப்பதால் மருத்துவமனை தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
வழக்குப்
பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். வாட்ஸ்அப்,
ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் அந்த வீடியோக்களைப் பகிர்ந்தவர்களின்
நம்பரையும் சேகரித்து விசாரிக்கத் தொடங்கினர்.
குடியாத்தம்
நெல்லூர்பேட்டை சிவகாமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவன்
விஜயன் (19) மற்றும் செதுக்கரையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கும்
சுகுமார் (19) மற்றும் அவரின் நண்பர் சிவகுமார் (22) ஆகிய மூவரும்தான்
தவறான தகவலை சமூகவலைதளத்தில் பரப்பியது எனத் தெரியவந்தது. மூன்று பேரையும்
போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
விசாரணையில்,
''ஃபேஸ்புக்கில் இருந்து அந்த இளைஞர்களின் புகைப்படங்களை எடுத்து
ஆண்ட்ராய்டு செல்போனில் புதியதாக வந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து
விளையாட்டுத்தனமாகப் பரப்பினோம்'' என்று கூறினர். அவர்களிடமிருந்து மூன்று
செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

No comments:
Post a Comment