தஞ்சை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை
திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15வது நாளாக
போராட்டம் நடத்துகின்றனர். என்.ஆர்.சி, என்.பி.ஆர், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ
சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசு, ஆதரித்து வாக்களித்த அதிமுகவுக்கு
எதிராக போராட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. டெல்லி ஷாஹீன் பாக்
பாணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment