
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் மனித குலத்துக்கே
எதிரானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்றும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று சீமான் இன்று பேசியதாவது:
ஒரு
தலைவர் என்பவர் நாட்டை, மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். அப்போதுதான்
மக்களுக்கு ஜாதி, மதம் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்காது. ஆனால் மதத்தையும்
ஜாதியையும் தூக்கிப்பிடிக்கிற அரசுதான் இங்கே இருக்கிறது.
மதத்துக்கும்
அரசுக்கும் எந்த ஒரு வித்தியாசமுமே இல்லாத நிலைதான் இருக்கிறது. பல
ஆண்டுகளாக இந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை குடியுரிமை அற்றவர்கள் எனக்
கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
நீங்கள்
இப்படி செய்தால் என் பாஸ்போர்ட்டை கொடுத்துவிடுங்கள்.. வேறு நாட்டுக்கு
செல்கிறோம் என கூறுகிற நிலைதான் உருவாகும். மத்திய அரசின் குடியுரிமை சட்ட
திருத்தம் என்பது மனித குலத்துக்கே எதிரானது.
இங்கே அமைதியான
போராட்டம் நடைபெற்றது. ஆனால் இங்கே தேவையே இல்லாமல் தடியடி நடத்தி அனைத்து
இடங்களிலும் போராட்டத்தை நடத்துமாறு செய்துவிட்டனர். மத்திய அரசின்
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும்வரை நமது போராட்டம் தொடரும்.
நாம் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு சீமான் பேசினார்.
source: oneindia.com
source:m.dailyhunt.in
No comments:
Post a Comment