
கேரளாவில் கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை காப்பாற்றிய
காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளா மாநிலத்தில்
உள்ள மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு எனும் பகுதியில் உள்ள பகவதி அம்மன்
கோயில் திருவிழா நேற்று விமர்சியாக நடைபெற்றது.
இந்த
திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரத்தில் திருவிழா
நற்றிபெற்ற நிலையில், திருவிழாவை காணவந்த இளம் பெண் ஒருவர் தடுப்பு சுவர்
இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் சிறிதளவு தண்ணீர்
இருந்ததால் காயம் இல்லாமல் உயிர் பிழைத்த அந்த பெண் உடனே தனது தொலைபேசி
மூலம் காவல் துறைக்கு போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறி கதறி
அழுதுள்ளார்.
இதனை அடுத்து, இன்ஸ்பெக்டர் ஜலீல் தலைமையிலான
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 மணி நேரமாகியும் தீயணைப்பு வீரர்கள் அங்கு
வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரம் என்பதால் கிராமத்து
மக்களும் கிணற்றுக்குள் இறங்கி இளம் பெண்ணை மீட்க தயங்கியுள்னர்.
இதனால்,
தானே களத்தில் குதித்த காவல் ஆய்வாளர் ஜலீல் கயிறு கட்டி கிண்ற்றுக்குள்
இறங்கினார். பின்னர் அங்கிருந்த மக்களின் உதவியுடன் இளம்பெண்ணை கிணற்றில்
இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் ஜலீலின் இந்த
செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment