சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக
எம்.பி அனந்த்குமார் ஹெக்டே மீது கட்சியின் தேசிய தலைமை, ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில்,
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பாஜக எம்.பி அனந்த்குமார் ஹெக்டே,
ஒரு குழுவினர், ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்போட்டுக் கொண்டு, நாடகமாடி,
சுதந்திரம் வாங்கி, வரலாற்றில் இடம்பிடித்து விட்டதாக கூறினார். அவரது
பேச்சு, மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக
கண்டனம் எழுந்தது. இதுகுறித்து அவர் வருத்தம் தெரிவிக்காத நிலையில், தாம்,
தவறாக எதுவும் பேசவில்லை என்று கூறியது, பாஜகவிற்கு தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து எம்.பி அனந்த்குமார் ஹெக்டே மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க பாஜக தலைமை தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment