
டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் அரவிந்த்
கெஜ்ரிவால் 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் 3-வது முறையாக ஆட்சியை
தக்கவைத்து கொண்டார். இதில் பாஜக 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி
தோல்வியடைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அரவிந்த்
கெஜ்ரிவால், டெல்லி முதல்மந்திரி பதவியை ஏற்றார். இந்நிலையில், இன்று
முதல்மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை
மந்திரி அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இது ஒரு மரியாதை
நிமித்தமான சந்திப்பு எனவும் இதில் அரசியல் தொடர்பான விவாதங்கள் எதுவும்
நடைபெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment