பொருளாதாரத்தை கையாள பாஜக அரசுக்கு எந்த தகுதியும் இல்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்
வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்
செய்தார். பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில் பட்ஜெட்டில் இதற்கான
திட்டங்கள் ஏதுமில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ந்தநிலையில்
ஹைதராபாத்தில் பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்து
கொண்டார். அவர் கூறியதாவது:
''ஒட்டுமொத்தமாக
குறிப்பிடுவது என்றால் நோயாளி மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால்
மருத்துவருக்கு சிகிச்சையளிக்க எந்த தகுதியும் இல்லை.
நோயை பாதிப்பை அவர் தவறாகவே புரிந்து கொள்கிறார்.
மக்களை சரியாக புரிந்து கொண்டு சிகிச்சையளித்த மருத்துவர் முன்னாள்
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் போன்றவர்கள் இப்போது அரசை விட்டு
விலகி விட்டனர். நோயை சரியாக புரிந்து கொள்ள முடியாத டாக்டர்களால் எந்த
பயனும் இல்லை'' எனக் கூறினார்.
தவறவிடாதீர்

No comments:
Post a Comment