
பாட்னா : 1947 லேயே முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு
அனுப்பியிருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசி உள்ளது
புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசுவது புதிதல்ல. பா.ஜ., தலைமையில் பலமுறை கண்டித்தும் இவரது சர்ச்சை
பேச்சு ஓய்ந்த பாடில்லை. தற்போதைய நிகழ்வாக பீகாரின் புர்னியா பகுதியில்
பிப்.,19 ம் தேதியன்று பேசிய கிரிராஜ், தேசத்திற்காக நம்மை அர்ப்பணிக்க
வேண்டிய நேரமிது. 1947 க்கு முன்பிருந்தே இஸ்லாமிய நாடு வேண்டும் என ஜின்னா
வலியுறுத்தி வந்தார். நமது முன்னோர் செய்த பெரிய தவறுக்கு நாம் விலை
கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த சமயத்தில் இஸ்லாமிய சகோதரர்களை
பாக்.,க்கு அனுப்பி விட்டு, இந்துக்களை திரும்ப அழைத்திருந்தால் நாம் இந்த
சூழலில் இருந்திருக்க மாட்டோம்.
இங்கு அவர்களுக்கு வீடு இல்லை என்றால் எங்கு செல்வார்கள்?
என்றார்.மத்திய கால்நடை, பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக
உள்ள கிரிராஜ் சிங்கிற்கு 4 நாட்களுக்கு முன்பு கூட சர்ச்சை பேச்சிற்காக
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, சம்மன் அனுப்பி இருந்தார். இஸ்லாமியர்களுக்கு
எதிராக பலமுறை அவர் கருத்து கூறி உள்ளார். சிஏஏ.,வுக்கு எதிராக நாடு
முழவதும் நடைபெறும் போராட்டங்கள் குறித்து பேசிய போது மீண்டும்
சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.
No comments:
Post a Comment