சென்னை: சென்னையை அடுத்துள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்கள்
ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
காட்டாங்குளத்தூரில்
செயல்பட்டு வரும் பிரபலமான காலேஜ் எஸ்.ஆர்.எம்... இங்கு பல மாநிலங்களில்
இருந்து ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று
மாலை மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக எம்பிஏ 2-ம் ஆண்டு
படிக்கும் மாணவர்கள் காலேஜ் கேன்டீனுக்குள்ளேயே அடித்து கொண்டனர்.
இரு
பிரிவினர் இடையே நடந்த மோதலில் எப்படியும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது... இதில் ஒரு குரூப் மாணவர்கள்
கையில் துப்பாக்கி இருந்துள்ளது..
இன்னொரு குரூப் மாணவர்கள் கையில் வீச்சரிவாள் உள்ளது.
ஆளுக்கு ஒரு வீச்சரிவாளை எடுத்து கொண்டு எதிர்தரப்பை தாக்குகிறார்கள்.
இவர்களுக்கு
துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.. ஏற்கனவே இதே
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகேஷ் என்ற மாணவனையும் துப்பாக்கியால் சுட்ட
சம்பவம் நடந்துள்ளது. இப்போது படிக்கும் பிள்ளைகளிடம் காலேஜ்
கேம்பசுக்குள்ளேயே துப்பாக்கி வந்துள்ளது பெரிய அதிர்ச்சியை பொதுமக்களுக்கு
ஏற்படுத்தி உள்ளது.
எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டார்கள்
என்று தெரியவில்லை..ஆனால் இந்த மோதலால் மாணவர் ஒருவருக்கு பலமான அடி
ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன... எனினும் இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. காலேஜ்
கேன்டீனில் மாணவர்கள் மோதி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
source: oneindia.com

No comments:
Post a Comment