சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக
தொடர்ந்து பலர் இறந்து வருகின்றனர். இதனால் உலகின் பிற நாடுகளும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது சென்னை
ராயப்பேட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், ” தமிழகத்தில்
யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பு சந்தேகத்தின்
பேரில் 42 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 42 பேரில் யாருக்கும் கொரோனா
பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள
தமிழக எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு
மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு
உள்ளது, எந்த தட்டுப்பாடும் இல்லை ” என்று கூறினார்.

No comments:
Post a Comment