
கடந்த சில நாட்களாக டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக
நடைப்பெற்று வரும் வன்முறை என்பது திட்டமிட்டு நடத்தப்படும் மதவெறியாட்டம்
என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது ஒரு ஒத்திகை தான்
என்றும், இந்தியா முழுவதும் இத்தகைய வன்முறைக்கு மதவெறி கும்பல் தயாராகி
வருவதாக திருமா குற்றம்சாட்டியுள்ளார். மதவெறி கும்பல்கள் துப்பாக்கி
உள்ளிட்ட ஆயித்தங்களுடன் வீதியில் வந்து இஸ்லாமியர்களை தக்குகிறார்கள்
என்றும், இந்தப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
டெல்லி வன்முறை தொடர்பான ரஜினியின் கருத்து குறித்து பேசிய திருமா, ஜனநாயக சத்தியாக தன்னை காட்டிக்கொள்ளும் யாரும், பாஜகவில் இருந்தாலும் கூட இந்த வன்முறையை கண்டித்து தான் ஆகவேண்டும் என திருமா கூறியுள்ளார். டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது அமைச்சரின் விருப்பப்படி செயல்படுகிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment