
புதுடில்லி: வடகிழக்கு டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2
சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை
எதிர்த்து, டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு
மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதேபோல், டில்லியின் வட கிழக்கு
பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் உள்ளிட்ட இடங்களில்
போராட்டக்காரர்களுக்கும், குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது.இந்த மோதல் கலவரமாக மாறியதில் இன்று வரை 35 பேர்
பலியாகியுள்ளனர். கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
18 எப்ஐஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார்
தெரிவித்துள்ளனர்.2 சிறப்பு விசாரணை குழுக்கள் இந்நிலையில் கலவர வழக்கை
விசாரிக்க இரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
டில்லி கலவர வழக்கை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.கே. சிங்
மேற்பார்வையில், குற்றப்பிரிவின் கீழ் ஜோய் டிர்கி, ராஜேஷ் தியோ ஆகிய
இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு
அமைக்கப்பட்டுள்ளது.கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 18 எப்.ஐ.ஆ.ர்கள்
மற்றும் கைதான 106 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணை
அறிக்கை விவரங்கள் இரு சிறப்பு விசாரணைக்குழுவிடமும்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு துணை கமிஷனர்களும் உடனடியாக பொறுப்பேற்றனர்.
துணை நிலை கவர்னர் ஆய்வு தற்போது கலவரம் பாதித்த வடகிழக்கு பகுதி சட்டம்
ஒழுங்கு நிலைமை குறித்து துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தலைமையில் ஆய்வு
கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் உள்துறை செயலாளர், சட்டம் ஒழுங்கு சிறப்பு
போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
Dailyhunt
No comments:
Post a Comment