
தெலங்கானா மாநிலம் நல்லக்கொண்டா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனின்
மரணத்தில் சந்தேகமடைந்த அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
9 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது தாய்,
உறவினர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) கூறியுள்ளார். சிறுவன்
பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,
அவரது தந்தையிடம் விவரத்தை கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டுக்கு சென்று
பார்த்தபோது சிறுவன் உயிரற்ற நிலையில் இருந்துள்ளார். அவரது கழுத்தில்
காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து போலீஸில் புகார்
தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸாரின் விசாரிக்கத் தொடங்கினர் சிறுவனின் மரணம் இயற்கையானது என்று அந்தப்பெண் கூறியுள்ளார்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மகனை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து
பேசிய நல்கொண்டா காவல்துறையினர், ``அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியை
சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் அவர்கள்
இருவரிடையே நெருக்கம் அதிகரித்திருக்கிறது. இதனையறிந்த அந்தப் பெண்ணின்
கணவர் அவரைக் கண்டித்துள்ளார். இருந்தும் அந்தப்பெண் அவருடனான பழக்கத்தைத்
துண்டிக்கவில்லை. இந்நிலையி தான் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில்
உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் 9 வயது மகன் தன் தாயை மற்றொரு நபருடன்
நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறான்.
தந்தையிடம்
கூறிவிடுவேன் என தாயை மிரட்டியுள்ளான். இந்த விவகாரம் வெளியில்
தெரிந்தால், பிரச்னையாகிவிடும் என்பதால் தன் மகனையே கொலை செய்ய அந்தப்பெண்
துணிந்துவிட்டார். வீட்டில் இருந்த துண்டை எடுத்து மகனின் கழுத்தை இறுக்கி
கொலை செய்துள்ளார். இதனையடுத்து உறவினர்களிடம் மகனுக்கு உடல்நிலை சரியில்லை
எனக் கூறியுள்ளார். சிறுவனின் கழுத்தில் இருந்த காயத்தால் சந்தேகமடைந்து
புகார் தெரிவித்தனர். சிறுவனை கொலை செய்யும்போது அந்த நபரும் அருகில்
இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொலையில் அவருக்கு பங்கு
இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை" என்றனர்.
No comments:
Post a Comment