
சென்னை: தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பின் லஞ்ச
ஒழிப்பு துறையில் இருந்த சுனில் குமார் ஐ.பி.எஸ்.,க்கு டி.ஜி.பி.,யாக பதவி
உயர்வு அளித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.பொருளாதார குற்றப்பிரிவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த
சுனில் குமார் சிங்கிற்கு சிறைத்துறை டி.ஜி.பியாக பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரியாக இருந்த அபாஷ்குமாருக்கு,
பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காவலர் நலவாரியத்தின் ஐ.ஜி யாக இருந்த சேஷசாயி,
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெறுகிறார்.மதுரை
மாநகர் போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு கூடுதல்
டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment