
புதுடில்லி: பிரதமர் மோடியின் அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.8
லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், அவர்களின் பெயர்களை
பாஜ., அரசு வெளியிட வேண்டும் எனவும் காங்., பொதுச்செயலர் பிரியங்கா
வலியுறுத்தியுள்ளார்.காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
தனது டுவிட்டர் பதிவில், கிரெடிட் சூயிஸ் அறிக்கையால் அம்பலப்படுத்தப்பட்ட
வங்கிக்கடன் தள்ளுபடிகள் என சில புள்ளிவிவரங்களை பதிவிட்டார். அதில்
குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2014ல் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில்
இருந்து ரூ.7,77,800 கோடி தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான
கடன் ஏன் தள்ளுபடி செய்யவில்லை? வங்கியில் இருக்கும் மக்களின் பணத்திற்கு
யார் பாதுகாப்பு?
என கேள்வியெழுப்பி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.இதனை
குறிப்பிட்டு காங்., பொதுச்செயலர் பிரியங்கா டுவிட்டரில்
பதிவிட்டுள்ளதாவது: மோடியின் முதலாளி நண்பர்களின் ரூ.8 லட்சம் கோடி கடன்களை
பாஜ., அரசு, தள்ளுபடி செய்துள்ளது. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின்
பெயர்களை வெளியிடப்படும் என கூறும் அரசு, ஏன் மக்களிடம் பெயர்களை
வெளியிடவில்லை? நாட்டின் விவசாயிகள் கடன் சுமையால் இருக்கும்போது, எந்த
செயல்முறைகளின் அடிப்படையில் அவர்களின் கடனை தள்ளுபடி செய்தீர்கள்? இந்த
கேள்விகளை பாஜ., அரசு புறக்கணிக்க முடியாது. தள்ளுபடி செய்யப்பட்டவர்களின்
பெயர்களை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment