Latest News

  

ஆண் என்பதால் புர்கா அணியவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் புர்கா அணிந்தது குறித்து, பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார். அதற்கு, கதிஜாதான் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டிருந்தார். ஆனால், கதிஜாவின் தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருந்தார்.தற்போது, தன்னுடைய மகள் புர்கா அணிவது குறித்து, தன்னுடைய கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறோமோ, அவற்றின் வழியாகவே பிள்ளைகளையும் அழைத்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. அப்போது தான், நம்முடைய பிரச்னை எதுவென்று அவர்களுக்குத் தெரியும். நம்முடைய நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரண்டையுமே அவர்கள் உணரவேண்டும். அதன்பின், அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்தால், எது சரியென்ற முடிவை அவர்கள் எடுப்பார்கள். அதைத்தான், என் மகள் கதிஜா செய்தார். புர்கா குறித்த சர்ச்சைக்கு, பதில் சொல்வதற்கு முன் நாங்கள் கலந்து பேசிக்கொள்ளவில்லை. கதிஜா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததைப் பார்த்தேன்.

நானும், அதைப் பகிர்ந்தேன். அந்த நேரத்தில் அது தேவையானதாக இருந்தது. காரணம், முக்காடுக்குப் பின்னால் இருப்பவர் கதிஜா. அது அவருடைய முடிவாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.

புர்கா அணிவது மத ரீதியிலானது என்பதைவிட மன ரீதியிலானது என நினைக்கிறேன். ஒரு ஆண் புர்கா அணியக்கூடாது. இல்லையென்றால், நானே தாராளமாக ஒரு புர்கா அணிந்து கொள்வேன். அப்படி அணிந்துகொண்டால் கடைக்குச் செல்வதற்கும், வாழ்வின் பல விஷயங்களை உணர்வதற்கும், அது உதவியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் கதிஜாவின் சுதந்திரத்தை அவர் உணர்கிறார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் வீட்டு துக்க நிகழ்வுகளுக்கு, கதிஜாவால் எளிதாக சென்றுவரமுடிகிறது. சமூகத்துடன் அவர் இணைந்திருப்பதை, கதிஜாவின் சிம்ப்ளிசிட்டியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.