
நாகலாந்து துணைமுதல்வராக உள்ள
ஒய்.பட்டூன், விதிமுறைகளை மீறி 1,100 போலீசாரை நியமித்ததாக விக்கா. ஏ.ஆய்
என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை லோக் ஆயுக்தா அமைப்பு தாமாக
முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது. லோக் ஆயுக்தா நீதிபதி உமாநாத் சிங்
நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த போது, “விதிமுறைகளை மீறி 1,135
போலீஸ்காரர்களை நியமித்த நாகலாந்து துணை முதல்வர் பட்டூனிடம் முதல்வர்
ஆரம்ப கட்ட விசாரணை நடத்தலாம். இதையடுத்து, முதல்வர் நெய்பியோ நியோ துணை
முதல்வர் பட்டூனிடம் நடத்திய வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையாக அடுத்த
விசாரணைக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், துணை முதல்வர்
பட்டூனும் வாக்குமூலத்தை தனது பதில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரருக்கு நாகலாந்து போலீசார் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் ” என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment