
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகே துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் தான் பணியாற்றிய பஞ்சாயத்திற்கே
தலைவரான நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம்
முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27
மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்
வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் தான்
பணியாற்றிய பஞ்சாயத்திற்கே தலைவரான நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள்ள கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் சரஸ்வதி.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சரஸ்வதி
தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டு, கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர்
பதவிக்குப் போட்டியிட்டார்
வியாழனன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சரஸ்வதி தேர்தலில் வெற்றி பெற்று கான்சாபுரம் பஞ்சாயத்துக்குத் தலைவராகியுள்ளார்.
இதன்மூலம் எளிய மக்களுக்கும் அதிகாரத்தை பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது என்று கருதலாம்.
No comments:
Post a Comment