
அழகிற்காகவும், கண்களை பாதுகாக்கவும்
இன்று அதிகளவானவர்கள் சன்கிளாஸ் பயன்படுத்திவருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்காகவே அதிநவீன சன்கிளாஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
Magnum என பெயரிடப்பட்டுள்ள இதனை முற்றிலுமாக மடிக்கக்கூடியதாக இருத்தல்
விசேட அம்சமாக காணப்படுகின்றது. லண்டனை தளமாகக் கொண்ட Roberto Pallini
நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. இச் சன்கிளாஸ் ஆனது கோடை காலங்கள் மற்றும்
குளிர்காலங்களில் பயன்படுத்தக்கூடியதாக இரண்டு வகைகளில்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது ஏறத்தாழ 24 டொலர்களாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி திரட்டல் நடவடிக்கைக்காக Kickstarter
தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment