நாக்பூர்: மகாராஷ்டிராவில் நாக்பூர் ஜில்லா பரிஷத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள இடம் நாக்பூர். இது பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது.
நாக்பூர்
ஜில்லா பரிஷத் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான
தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் இன்று
அறிவிக்கப்பட்டன.
இதில் நாக்பூர் ஜில்லா பரிஷத்தை காங்கிரஸ்
வென்றுள்ளது. மொத்தம் 58 உறுப்பினர்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 31-ல்
வென்றது. பாஜகவுக்கு 14; தேசியவாத காங்கிரஸுக்கு 10 இடங்கள் கிடைத்தன.
நாக்பூரில் பாஜக தோல்வியை தழுவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு 14; தேசியவாத காங்கிரஸுக்கு 10 இடங்கள் கிடைத்தன.
நாக்பூரில்
பாஜக தோல்வியை தழுவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை
உற்சாகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தமது
ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில்
காங்கிரஸ் வென்றுள்ளது. மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர் என
பதிவிட்டுள்ளார்.
நிதின் கட்காரி ஊரில் தோல்வி
இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரில் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment