உலகம் முழுவதும் ஏற்படுத்திய, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன
சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது தொடர்பான
விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனி கெய்சர் என்ற
கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் முன்னாள் ஊழியர், மலேசியா, கென்யா மற்றும்
பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளின் தேர்தல் தொடர்பான சில ஆவணங்களை பெயர்
வெளியிடாமல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு தகவல் திருட்டு
தொடர்பான சர்ச்சையில் சிக்கி மூடப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா
நிறுவனத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆவணங்களை அவர் ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்திருந்தார்.

இன்னும்
68 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்கள் அடுத்த
மாதத்திற்குள் வெளியாகப்போகின்றன என @hindsightfiles என்ற ட்விட்டர்
கணக்கின் மூலம் கூறியிருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் மூலம் எவ்வளவு
தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, எந்த நாட்டில் இந்தத் தகவல்கள்
ஆட்சியை மாற்றியிருக்கின்றன போன்றவை அவர் வெளியிட்ட ஆவணங்களில்
இருக்கின்றன. அதில் சுமார் 68 நாடுகளின் பெயர் இடம்பெற்றுள்ளன. ``அடுத்து
நடக்கவிருக்கும் தேர்தலில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதெனத் தெரியவில்லை.
என்னால் முடிந்த அளவு ஆவணங்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறேன்" எனக்
கூறியிருக்கிறார்.
2018-ல் அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே சில
ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த அவர், ``இதெல்லாம் அந்த நிறுவனம் செய்த
ஊழலின் ஒரு பகுதிதான். மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஊழலை
அவர்கள் செய்துள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
ஃபேஸ்புக்கின்
மூலம் நடந்த தகவல் திருட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழல்களில் ஒரு
சிறிய பகுதி மட்டுமே. 2017-ல் உக்ரைனிலும் ஓர் அரசியல் கட்சிக்காக அவர்கள்
வேலை பார்த்ததற்கான ஆவணங்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானது ``ஷெல்
நிறுவனங்களின் மூலம் கறுப்புப் பணத்தை அரசியலுக்குள் கொண்டு வருவதில்
பெரும் உதவியைச் செய்தது. 2016 அமெரிக்கத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை
அந்த ஆவணங்கள் காட்டிக்கொடுத்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார் பிரிட்டனி
கெய்சர்.

No comments:
Post a Comment