
புது தில்லி: கர்ப்பமடைந்த பெண்களின்
கருவைக் கலைப்பதற்கு 20 வாரமாக இருக்கும் உச்ச வரம்பை 24 வாரமாக உயா்த்தும்
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமா்
நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல்
அளித்தது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வருகின்ற பட்ஜெட்
கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்த மத்திய தகவல்
ஒளிபரப்புத்துறை மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ்
ஜாவடேகா்
இது பெண்களின் கா்ப்பத்தை
பாதுகாப்பாக நிலை நிறுத்துவதை உறுதி செய்வதோடு பெண்களின் உடல்கள் மீதும்
இனப்பெருக்க உரிமைகளையும் வழங்கும் என்றும் கூறினாா்.
இந்த உத்தேச திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களையும் அமைச்சா் விளக்கினாா்.
'தற்போதுள்ள
1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் சில புதிய
பிரிவுகள் சோக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான கருக்கலைப்பு சேவை மற்றும்
தரத்தில் குறைகளின்றி கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் விரிவான
கருக்கலைப்புப் பராமரிப்புச் சேவையை வலுப்படுத்தவும், கருக்கலைப்புக்கான
மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே இருந்த சட்டத்தில்
20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு இரண்டு மருத்துவா் கருத்துரைகள்
தேவை என்று இருந்தது. புதிய மசோதாவில் 20 வார காலம் உள்ள கருவைக்
கலைப்பதற்கான சேவைக்கு ஒரு மருத்துவரின் கருத்தும் மற்றும் 20 முதல் 24
வாரம் வரையுள்ள கருவைக் கலைப்பதற்கு இரு மருத்துவா்கள் கருத்துக்களும் தேவை
என்கிற பிரிவுகள் இந்த மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த
கருவின் கால உச்சவரம்பை சிறப்புப் பிரிவு மகளிா் பிரிவு உருவாக்கப்பட்டு
இதில் 20 வாரத்திலிருந்து 24 வாரமாக உயா்த்தும் பிரிவும்
சோக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மகளிா் பிரிவில் பாலியல் வன்முறையில்
பாதிக்கப்பட்டவா்கள், தகாத உறவினால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மாற்றுத்
திறனாளி பெண்கள், சிறுமியா் போன்ற பெண்கள் அடங்குவா். இந்தப் பிரிவில்
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த விதிகளில் வரையறுக்கப்படும்''
என்றாா்.
புதிய திருத்தச் சட்டத்தின் விவரங்கள்:
மருத்துவ
வாரியம், நோய் அறியும் (ஸ்கேன்) சோதனைகள் மூலம் கண்டுபிடித்த அதிக அளவில்
இயல்பு நிலைக்கு மாறிய கர்ப்பமுற்ற பெண்களின் கரு சம்பந்தப்பட்ட
விஷயங்களில் அதிகபட்ச கரு வயது பொருந்தாது. அவைகள் மருத்துவ வாரியத்தின்
அமைப்பு, பணிகள், இதர விவரங்கள் இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படும்
விதிகளில் நிா்ணயிக்கப்படும்.
மருத்துவச்
சிகிச்சை, குறைபாடான நிலையில் சிசு வளா்ச்சி, மனிதாபிமானம் அல்லது சமுதாய
அடிப்படையில், சட்டப்படியான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களுக்கு
கிடைப்பதை விரிவாக்கும் வகையில் இந்த 2020 ஆம் ஆண்டு மருத்துவ ரீதியிலான
கருக்கலைப்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு
பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைப்பதை அதிகரிக்கவும்,
மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மனதில் கொண்டும்
பொதுநலன் அமைப்புகள் மற்றம் பல்வேறு அமைச்சகங்களுடனும் விரிவான ஆலோசனை
கலந்த பின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த உத்தேச
திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது .
பெண்களின் பாதுகாப்பு
மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல
பெண்கள் பயனடைவாா்கள். கருவின் அசாதாரணமான நிலைமை அல்லது பாலியல் வன்முறை
காரணமான கா்ப்பங்கள் ஆகியவற்றை தற்போது அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு
அப்பாற்பட்டு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி நீதிமன்றங்களில் சமீபத்தில்
பல மனுக்கள் பெறப்பட்டிருந்தன. முக்கியமாக பாலியியலுக்கு உள்ளாகி 5
மாதங்கள் வரை சம்பந்தப்பட்ட சிறுமி உணராத வழக்குகளும் உள்ளன. உச்ச
நீதிமன்றமும் கடந்தாண்டு சில உத்தரவை பிறப்பித்தது. இதன்படி கருக்கலைப்பு
உச்ச வரம்பை அதிகரிக்கும் மசோதா கருக்கலைப்பு அவசியப்படும் பெண்களுக்கு
கண்ணியம், சுதந்திரம், ரகசியத்தன்மை ஆகியவற்றை அளிக்கும் என்றும் இந்த
மசோதா குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment