
குட்டக்குட்ட குனிய மாட்டோம்: 2021-ல் கூட்டணியா தனித்துப்போட்டியா? -இனிதான் முடிவு: பிரேமலதா பேச்சு
குட்டக்குட்ட குனிய மாட்டோம், 2021 தேர்தலில் தேமுதிக வீறுகொண்டு எழும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆவேசமாக பேசியனார்.
தங்களது
திருமணவிழாவில் கலந்துக்கொண்டு பேசி பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அரசியல்
குறித்து காரசாரமாக பேசினார். குட்டக்குட்ட குனியமாட்டோம், கூட்டணி
தொடருமா? இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார் என்று பேசினார்.
அதிமுக கூட்டணியில் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஏற்பட்ட மனக்கசப்புதான் அவரது
பேச்சுக்கு காரணம் என்கின்றனர்.
நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது::
'தொண்டர்கள் தான் எங்கள் குடும்பம்.
எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணி தான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூட்டணி
தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான்.கூட்டணி என்பதால் குட்ட
குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள்
மீண்டு எழுவோம்
2021-ம் ஆண்டு தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று
சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும்
பிரச்சாரம் மேற்கொள்வார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய
கட்சியாக வரும்.
விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான்
நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம். கூட்டணியா அல்லது
கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோமா? என்பதை உரிய நேரத்தில் தலைவர்
அறிவிப்பார்".
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
No comments:
Post a Comment