சாதிப்பதற்கு விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்
என்பதை எடுத்துக்காட்டும் விதமாகப் பலரும் சாதித்து வருகின்றனர். அப்படியான
இன்னொரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் மகாலட்சுமி. சிவகாசியைச் சேர்ந்த
பொறியியல் பட்டதாரியான மகாலட்சுமி, ஏழ்மையான சூழ்நிலையிலும் லட்சியத்துடன்
படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 362 பேர் கொண்ட தரவரிசைப்
பட்டியலில் மாநில அளவில் நான்காவது இடம் பிடித்துள்ளார். மகாலட்சுமியிடம்
பேசினோம். ``எனது தந்தை கருப்பசாமி பட்டாசு தொழிலாளி. சிறுவயதிலிருந்தே
கல்வியிலும் சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். மகாலட்சுமி குடும்பத்தினருடன்
எதையும் புரிந்து கருத்துகளை ஆராய்ந்து படிப்பேன்.
அதனால் பள்ளி மற்றும் கல்லூரியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற
முடிந்தது. குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாகப் பொறியியல் படிப்பை முடித்த
நான், என் அப்பாவுடன் சேர்ந்து பட்டாசு தொழிலைப் பார்த்து அவருக்கு
உதவியாக இருந்தேன். வறுமையான சூழ்நிலையிலும் என் பெற்றோர் என்னைப் போட்டித்
தேர்விற்காக சென்னைக்குப் படிக்க அனுப்பினர். எனது திருமணத்திற்காகச்
சேர்த்து வைத்த நகையை அடகு வைத்து என்னைப் படிக்க அனுப்பினர். எனக்கு
மட்டுமல்லாமல் என் பெற்றோருக்கும், அரசு வேலையா? திருமணமா? என்று
யோசிக்கையில் அரசு வேலைதான் பெரிதாகத் தெரிந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக
குரூப் தேர்வுகளை எழுதி தோல்வியடைந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன்.
ஆனால் அதிலும் தோல்விதான் அடைந்தேன்.
ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்
மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். மீதமுள்ள நேரம் வீட்டு வேலையும்
அப்பாவுக்கு உதவியாக பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு
வந்தேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து புத்தகங்களை வாங்கிப் படித்தேன்.
பலமுறை தோல்வியைக் கண்டாலும் நான் சோர்வடையாமல் எப்படியாவது அரசுப் பணியில்
சேர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தேர்விற்காகப் படித்து வந்தேன். மகாலட்சுமிசெய்தித்தாளை
அதிகம் வாசிப்பேன். செய்திகள் மூலம் ஒவ்வொரு நிகழ்வையும் ஆர்வத்துடன்
கவனித்து சேகரித்து படித்தும் வந்ததே எனது வெற்றிக்கான காரணம். அரசுப்
பணியில் ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து அரசு வரம்பிற்கு உட்பட்ட
முறையில் உடனடியாகச் செய்து தர முனைப்பு காட்டுவேன்'' என்றார்
நம்பிக்கையுடன்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment