புதுடில்லி : ஜனாதிபதிக்கு அனுப்பும் கருணை மனுவில் கையெழுத்திட
மறுத்திருப்பதுடன், தனது பெயரால் அனுப்பப்பட்ட கருணை மனுவை திரும்பப்
பெறுவதாகவும் நிர்பயா பலாத்கார குற்றவாளி வினய் சர்மா
தெரிவித்துள்ளான்.2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் 23 வயதுடைய
மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி
பிறகு உயிரிழந்தார். குற்றவாளிகள் 6 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால்,
சிறார் நீதிமன்றத்திற்கு அவன் மீதான வழக்கு மாற்றப்பட்டது. மற்றொருவன்
சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மீதமுள்ள 4 பேருக்கும் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது.குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, தனது தூக்கு தண்டனையை
ரத்து செய்யும்படி டில்லி துணைநிலை கவர்னர் அனில் பாய்ஜாலுக்கு மனு
அனுப்பினான்.
அது நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை
அமைச்சகத்திடம் கருணை மனு அளித்தான். வினய் சர்மாவின் கருணை மனுவை உள்துறை
அமைச்சகம் நிராகரித்ததுடன், இவனின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என
ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்தது. டில்லி அரசும் வினய் சர்மாவின் கருணை
மனுவை ஏற்கக் கூடாது என ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தது.இந்நிலையில்
வினய் சர்மாவின் கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு
அனுப்புவதற்கு முன்பே, அதனை திரும்பப் பெறுவதாக வினய் சர்மா
தெரிவித்துள்ளான். தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்புவதாக இருந்த கருணை
மனுவிலும் கையெழுத்திட அவன் மறுத்துள்ளான். இதனால் தனக்கு விதிக்கப்பட்ட
தண்டனையை ஏற்றுக் கொண்டு, தூக்கை ஏற்க வினய் சர்மா தயாராகி விட்டானா என்ற
கேள்வி எழுந்துள்ளது.

No comments:
Post a Comment