
நெல்லை மாவட்டத்தில் டி.டி.வி.தின்கரன் கட்சியை சேர்ந்தவரை தலைவர் பதவியில் இருந்து தூக்க அதிமுக தரப்பு ஸ்கெட்ச் போட்டுள்ளது.

மக்களவை
தேர்தலுக்கு முன்பு நெல்லையில் வலுவாக இருந்த அமமுக பல்வேறு கூட்டுறவு
சங்கங்களின் பல பதவிகளை கைப்பற்றியது. ஆனால் பதவியை பிடித்த அமமுகவினர்
எல்லாம் மக்களவை தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி
விட்டனர்.
அதிமுகவில் முன்னாள் கவுன்சிலராக இருந்த பாலகிருஷ்ணன்
தற்போது அமமுகவில் அமைப்புச் செயலாளர் என்ற உயர் பதவியில் உள்ளார்.
இவர்
தான் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவர். ஆளுங்கட்சியினரை வீழ்த்தி விட்டு
இந்த பதவியை பிடித்தார். ஆனால் அவருடன் வெற்றி பெற்ற இயக்குநர்கள் எல்லாம்
மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக காட்சியும் மாறியது. அவர்கள் தற்போது
பாலகிருஷ்ணனின் பதவிக்கே வேட்டும் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு
வந்து விட்டனர்.
கூட்டுறவு
அதிகாரி தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கூட்டமும்
நடத்தப்பட்டு உயரதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பதவி தப்புமா என
பாலகிருஷ்ணன் மட்டுமின்றி பதவியை கைப்பற்றிய மற்ற கூட்டுறவு வங்கி
நிர்வாகிகளும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
ஆக மொத்தத்தில்
டி.டி.வி.தினகரனுக்கு மொத்தமாக அரசியலில் பால் ஊத்த ஸ்கெட்ச் போட்டு
விட்டது அதிமுக. கூவாத்தூரில் அடைத்து வைத்து எடப்பாடியாரை முதலமைச்சராக
ஆக்கியதே டிடிவி குடும்பம் தான். யாரால் அதிகாரத்திற்கு எடப்பாடி
வந்தாரோ... அவர்களுக்கே அரசியலில் பால் ஊற்றி படுகுழியில் தள்ள
திட்டமிட்டுள்ளார் எடப்பாடி..!
No comments:
Post a Comment