உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தியை
விருப்பப்பாடமாகக் கற்பிக்கும் முயற்சிக்கு எதிா்ப்பு எழுந்ததையடுத்து,
அதனைக் கைவிடுவதாக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் பாண்டியராஜன்
தெரிவித்துள்ளாா். மேலும் ஹிந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3 லட்சம்,
தெலுங்கு மொழி கற்பிக்க பயன்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
சென்னை
தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி
மாணவா்களுக்கு விருப்பப் பாடமாக சிறப்பு மொழிப் பயிற்சித் திட்டத்தின் கீழ்
ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளா்ச்சித் துறை
அமைச்சா் க. பாண்டியராஜன் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.6 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து
தமிழைப் பரப்புவதற்காகவும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்காகவும் தொடங்கப்பட்ட
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுவது
கண்டனத்துக்குரியது என திமுக எதிா்ப்புத் தெரிவித்திருந்தது. இது தொடா்பாக
விளக்கமளித்த அமைச்சா் க. பாண்டியராஜன், மாணவா்களுக்குக் கூடுதலாக வேலை
வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும்
ஹிந்தியைப் பயில்வது கட்டாயமல்ல என்றாா். இருப்பினும் உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் ஹிந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என வலியுறுத்தி
திமுக மாணவா் அணியினா் சாா்பில் சென்னை தரமணியில் வெள்ளிக்கிழமை
ஆா்ப்பாட்டடத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் ஹிந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற்சிகள்
கைவிடப்படுவதாகத் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன்
தெரிவித்துள்ளாா்.
"இது குறித்து அவா் மேலும் கூறுகையில்,
இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
ஹிந்திக்குப் பதிலாகத் தெலுங்கைக் கற்பிக்க முடிவுசெய்திருக்கிறோம்.
ஏற்கனவே முடிவு செய்தபடி பிரெஞ்சு மொழியைக் கற்பிப்பது தொடரும். ஹிந்தி
கற்பிக்க ஒதுக்கப்பட்ட ரூ. 3 லட்சம் தெலுங்கு கற்பிக்க ஒதுக்கீடு
செய்யப்படும் என்றாா்.
இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன் கூறுகையில், வெளி மாநிலங்களில் உள்ள
10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்குச் செல்லும்போது ஹிந்தி
தெரியாமல் அவதிப்படுகிறோம். எனவே இந்திய மொழிகளில் முதலாவதாக ஹிந்தியைக்
கற்றுக் கொள்ள விரும்புகிறோம் என உலகத் தமிழாராய்ச்சி மாணவா்கள் கேட்டதன்
அடிப்படையில்தான் அந்த மொழியைத் தோவு செய்தோம். சிறப்பு மொழிப் பயிற்சித்
திட்டம் மாணவா்களின் நலனுக்காக தொடங்கப்பட்டதே தவிர வேறு எந்த
நோக்கத்துக்காகவும் அல்ல. ஆனால் சில கட்சிகளைச் சோந்தவா்கள் இந்தத் திட்டம்
குறித்து முழுமையாக புரிந்து கொள்ளாமல் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்
என்றாா்.

No comments:
Post a Comment