
நேற்று கேரளத்தில் இந்திய வரலாற்று காங்கிரஸின் (Indian History
Congress) ஆண்டு மாநாட்டை கண்ணூர் பல்கலைக்கழகத்தில் கேரள ஆளுநர் திரு.
ஆரிஃப் முகமது கான் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விழாவில் நம்
வரலாற்றைத் திரித்து எழுதிய துச்சர்கள் பலரும் வரலாற்றாசிரியர்கள் என்ற
பெயரில் பங்கு பெற்றனர். குறிப்பு: IHC ஒரு இடதுசாரிகள் நிரம்பிய அமைப்பு.
வரலாற்றுத் திரிப்பாளர்களில் சிறந்த ஒருவரான இர்ஃபான் ஹபீப் CAA பற்றி
வாட்ஸப் வதந்திகள் சிலவற்றை மேடையில் பேசி அரசு இது பற்றியெல்லாம் பதில்
தரவேண்டும் என்றார்.
ஆளுநர் பெருந்தகை பேசுகிற போது ஹபீப் எழுப்பிய பல கேள்விகளுக்கு விடையாக சட்டம் குறித்த விளக்கத்தை அளித்தார்.
கூட்டத்தில் பலரும் அதெப்படி நீங்கள் இதை சரி என்று
சொல்லலாம் என்று கூச்சலிட்டனர். உடனே மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள்
பிரிவுனைக்குப் பின் இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள்
குறித்துப் பேசிய பேச்சை ஆளுநர் மேற்கோள் காட்டினார்.
அப்போது
மேடையில் இருந்த இர்ஃபான் ஹபீப் இருக்கையில் இருந்து எழுந்து 'கோட்ஸேவை
மேற்கோள் காட்டிப்பேசு. ஏன் மௌலானாவை மேற்கோள் காட்டுகிறாய்.' என்று
கூச்சலிட்ட படி ஆளுநரை அடிக்கப் பாய்ந்தார். ஆளுநரின் செயலாளர், உதவியாளர்
ஆகியோர் ஹபீபை தடுத்து, உட்கார வைக்க முயன்றனர். திமிறியபடி மேலும்
முன்னேறிய ஹபீபை மேடையில் இருந்த ஆளுநர் பாதுகாப்பு ராணுவ வீரர் அடக்கி
நாற்காலியில் அமரவைத்தார்.
மாற்றுத்தரப்பின் கருத்தைக் கேட்கக்கூட மறுக்கும் இவர்கள் வெளிநாட்டுப்
பத்திரிகைகளில் இந்தியாவில் மோடியால் கருத்து சுதந்திரம் பறி போனது என்று
புளுகை கட்டுரை என்ற பெயரில் எழுதுகிறார்கள். உண்மை மெதுவாக வீதி உலா
வந்தாலும் அதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதபடி சுயம்பிரகாசமாக வரும். நாம்
உண்மையின் வீதி உலாவுக்கு இயன்ற ஒத்தாசை செய்வோம்.
No comments:
Post a Comment