
சென்னை: அமித்ஷா 'சோலியை' முடிக்க வேண்டும் என்று, பொது நிகழ்ச்சி
ஒன்றில் பேசிய பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு எதிராக, சட்ட ரீதியாக
தமிழக பாஜக வழக்கு பதிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே, சமூக வலைத்தளங்களில் நெல்லை கண்ணன் தொடர்பான ஒரு சர்ச்சை வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
பிரபல தமிழ் அறிஞரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் தற்போது எதிர்க் கட்சியொன்றில் இருப்பதாக கூறப்படுகிறது
இஸ்லாமிய சமூகத்தினர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், நெல்லை கண்ணன் பேசுவது போல அந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அருகே அமர்ந்து இருப்பது போல, வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.
பேச்சு
அமித் ஷா பற்றி
அமித் ஷா பற்றி
அதில்,
அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை, நெல்லை கண்ணன் ஒருமையில்
பேசுவது போலவும், அமித்ஷா 'சோலியை' முடித்துவிட்டால் மோடியின் 'சோலியும்'
முடிந்துவிடும். ஆனால் நீங்கள் முடிக்க மாட்டேன் என்கிறீர்கள், என்பது போல
பேசுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது.
எதிர்ப்பு
பாஜக கோபம்
பாஜக கோபம்
இந்த
நிலையில், தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,
"பட்டப்பகலில் வெட்டவெளியில் என்னே ஒரு அறைகூவல். மாற்று கட்சியினரும்,
ஊடகங்களும் ஒரு சிறுகண்டனம் இல்லாது, கைகொட்டி இந்த வன்முறையை ஆதரிப்பது
என்ன விதமான அரசியலோ? சட்டரீதியாக தமிழக பாஜக, வழக்கு பதிவுசெய்யும். தமிழக
முதல்வர், இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை
விஸ்வரூபம்
விஸ்வரூபம்
இந்த வீடியோவை இன்று இரவு பாஜக
பதிந்துள்ளது. இதனால் நெல்லை கண்ணன் பேச்சு விவகாரம் பூதாகரமாக விட்டது.
இது எந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டது எதற்காக இப்படி ஒரு வார்த்தை
பேசப்பட்டது என்பது தொடர்பான மேலதிகமான எந்த ஒரு தகவலும் வீடியோவில் இல்லை.
source: oneindia.com
No comments:
Post a Comment