மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் ரேப்
இன் இந்தியா என தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதற்காக
மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்மிருதி ராணி மக்களவையில் கோரிக்கை
வைத்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி தான் கூறிய கருத்துக்கு
மன்னிப்பு கேட்க முடியாது என பாஜகவினருக்கு பதிலடி அளித்தார், இதனால்
மக்களவையில் பாஜகவினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த அமளிக்கு நடுவில் பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால்
நாட்டில் நடப்பதைத் தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் என கனிமொழி
தெரிவித்தார். கனிமொழி மட்டுமல்லாது எதிர்கட்சிகளின் உறுப்பினர்களில்
பெரும்பாலோனார் ராகுல் காந்திக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்நிலையில்
மக்களவையில் எதுவும் செய்ய முடியாத விரக்தியில் ராகுல் காந்தி மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை ஸ்மிருதி ராணி நாடினார்,. இதனால்
கோபமடைந்த நெட்டிசன்கள் 'ஷேம்லெஸ் ஸ்மிருதி ராணி' #ShamelessSmritiஎன்ற
ஹேஸ்டாக்குடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை ட்விட்டரில் திட்டித்
தீர்த்து வருகின்றனர்.ஷேம்லெஸ் ஸ்ருதிராணியுடன் ராகுல் காந்திக் கூறிய ரேப்
இன் இந்தியா #RapInIndia என்ற ஹேஷ்டேக்கும் இந்தியா முழுமைக்கும்
டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
Newstm.in

No comments:
Post a Comment