சென்னை: பீர் பாட்டிலை எடுத்து.. உடைத்து.. காமாட்சியின் தொடை,
கழுத்து, வயிறு, பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டார் கணவன் ராஜன்.. காரணம்
மனைவி மீது சந்தேகம்!
சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தம்பதி
ராஜன் - காமாட்சி.. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராஜன்
சமையல் வேலை பார்த்து வருகிறார். காமாட்சிக்கு 28 வயதாகிறது.
நன்றாக
போய் கொண்டிருந்த குடும்ப வாழ்வில் திடீரென சந்தேக புயல் வீச தொடங்கியது.
காமாட்சிக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக
ராஜன் நினைத்தார்.. இந்த சந்தேகம் வீட்டில் தினந்தோறும் சண்டை வர காரணமாக
இருந்து வந்தது.
இதே தகராறில் 6
மாசத்திற்கு முன்புகூட கணவன், குழந்தைகளை விட்டு விட்டு, ஆவடியில் உள்ள
அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் காமாட்சி.
இந்த 6 மாதத்தில் டைவர்ஸ் சம்பந்தமாக இருவருமே முயற்சி செய்து வருகிறார்கள்.. ஹைகோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது.
கடந்த
2 நாள்களுக்கு முன்பு காமாட்சி, குழந்தைகளை பார்க்க கணவன் வீட்டுக்கு
வந்தார். வந்த உடனேயே இருவருக்கும் திரும்பவும் சண்டை ஆரம்பித்துவிட்டது.
"இனிமேல் குழந்தைங்களை பார்க்ககூட இங்க வரக்கூடாது" என்று ராஜன்
காமாட்சியிடம் சொல்லவும், தகராறு உச்சத்துக்கு போய்விட்டது.
இதில்
ஆத்திரம் அடைந்த ராஜன், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து.. உடைத்து..
காமாட்சியின் கழுத்து, வயிறு, தொடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்த
ஆரம்பித்தார். காமாட்சிக்கு உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து ஊற்றியதை கண்டதும்
ராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு,
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காமாட்சியை மீட்டு ஆவடி அரசு
ஆஸ்பத்திரியிலும் பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு
ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். இப்போது காமாட்சிக்கு தீவிரமாக சிகிச்சை
நடந்து வருகிறது. ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்கு பதிவு செய்து,
தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
source: oneindia.com

No comments:
Post a Comment