சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா
செல்போனில் இருந்த பதிவு உண்மை என மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தடவியல்
துறை அறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி
பாத்திமா லத்திப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கி மரணமடைந்தார்.
மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி
காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம்
போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்
வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை
தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் தமிழக, கேரளா காவல்துறையிடம் உரிய விசாரணை கோரி புகார் அளித்துள்ளனர். குறிப்பாக அந்த தற்கொலை கடிதத்தையையும், செல்போனையும் மையமாக கொண்டு புகார் அளித்திருந்தார். தனது தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் குறித்து மாணவி தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். தனது மகள் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் அடிப்படையில் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இந்த வழக்கானது ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் செல்போனில் தனது மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் செல்போன், ஆய்வுக்காக தடயவியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் தடயவியல் நிபுணர்களின் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றம் மூலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில்; மாணவி பாத்திமா செல்போனில் இருந்த பதிவு உண்மை.
செல்போனில் பதிவு செய்திருந்த தற்கொலை குறிப்பு போலியானது அல்ல. தனது தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் குறித்து மாணவி தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் அந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டது என மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தடவியல் துறை அறிக்கை அளித்துள்ளது. ஆய்வு அறிக்கையை பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment