
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் அகில இந்திய
அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கால்பந்து போட்டிகளில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விதமாக இந்த செவன்ஸ்
கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப்போட்டிகளுக்குக் கலவையான
விமர்சனங்கள் எழுந்தாலும் கேரளக் கால்பந்து ரசிகர்களை இந்தப் போட்டி
ஈர்த்துள்ளது. நேற்று இரவு நடந்த போட்டியில் எஃப்சி பெரிந்தால்மன்னாவும்
சாஸ்தா திருச்சூர் அணிகளும் மோதின.
போட்டி
தொடங்கிய 27-வது நிமிடத்தில் எஃப்சி பெரிந்தால்மன்னா அணியைச் சேர்ந்த
கால்பந்து வீரரான தனராஜன் திடீரெனக் களத்தில் சரிந்து விழுந்தார். அவரை
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச்
சம்பவம் குறித்து அவரது நண்பரும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான
அமீருதீன் பேசுகையில், ``தனராஜன் கீழே விழுவதை நாங்கள் கவனித்தோம். அவரை
நோக்கி விரைந்தோம். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் எல்லா நம்பிக்கையும் முடிந்துவிட்டன.
இதயப்பிரச்னை காரணமாக எங்கள் நண்பர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள்
தெரிவித்தனர்.
இரவு 9.30 மணிக்குப் போட்டி தொடங்கியது. 9.57
மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. என்ன நடந்தது என்று கூட எங்களுக்குப்
புரியவில்லை. அவர் நன்றாகத்தான் விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று,
அவர் தனது இடது கையை மேலே தூக்கியவாறு சரிந்தார்'' எனக் கூறினார்.
39
வயதான தனராஜன் சந்தோஷ் டிராபி போட்டியில் கேரள அணிக்காக விளையாடியவர்.
இந்தியாவில் உள்ள கால்பந்து கிளப்களான மோகன் பகான மற்றும் கிழக்கு வங்காள
அணிக்காக விளையாடி ஏராளனமான வெற்றிகளைத் தேடித்தந்தவர். அவரது இழப்பு அவரது
குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டி ஏற்பாட்டாளர்கள்
மீது தற்போது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. கால்பந்து போட்டிகளிலிருந்து
ஓய்வு பெற்ற தனராஜ் மலம்ப்புழா டேலட்ன்ட் ஃபுட்பால் அகடாமியின்
பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.
கால்பந்து
வீரரின் ஃபிட்னஸ் என்பது வேறு பயிற்சியாளரின் ஃபிட்னஸ் என்பது வேறு.
முன்னாள் வீரர்களின் நலனில் செவன்ஸ் கால்பந்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்
அக்கறை எடுத்துக்கொள்வதில்லையா எனக் கேள்வி எழுப்புகின்றனர் கால்பந்து
விமர்சகர்கள்.
No comments:
Post a Comment