டிக்டாக்கில் கத்தியைக்காட்டி மிரட்டி, நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 இளைஞர்களை
காவல்துறையினர் கைது செய்தனர்.
மியூசிக்கலி
என்ற பெயரில் முதலில் அறிமுகமாகி பிரபலமான செயலி தான் டிக்டாக். திரைப்பட
வசனங்கள், பாடல்களுக்கு ஏற்ப நடித்து வாயசைத்து பிரபலமானார்கள் பல
சாமானியர்கள். தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட, நடிக்க
விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல
ஆபாசமான வகையில் அதை பயன்படுத்தத் தொடங்கினர் மக்கள், அந்த விடீயோக்களுக்கு
வரும் கமெண்ட்களும் உச்சகட்ட அபாசத்திற்கு செல்லத் தொடங்கின.இதன் காரணமாக,
டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும் நெறிமுறைப்படுத்த வேண்டும்
என்றும் குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன.
இருப்பினும் டிக்டாக் மீதான சர்ச்சைகளும், டிக்டாக்கால்
சில விபரீதங்களும் தொடர்ந்து அரங்கேறிகொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில்
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித்,
நிஷாந்த் ஆகியோர் பட்டா கத்தியைக் காட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக
வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர்களைக் கைது செய்த தாம்பரம்
காவல்துறையினர், இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment