
அமராவதி: ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகரங்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில்
இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமான நிலையில் அமராவதி என்ற புதிய
தலைநகரை உருவாக்கினார் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் சட்டசபை
தேர்தலில் வென்று முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி தலைநகர்
உருவாக்கத்தில் விருப்பம்ம் காட்டவில்லை.
ஜம்மு
காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது மத்திய அரசு
வெளியிட்ட புதிய வரைபடத்தில் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாமல் இருந்தது
சர்ச்சையானது. தற்போது ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்க உள்ளதாக ஜெகன்
மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திரா
சட்டசபையில் இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல்
செய்தார். அதில், சட்டசபைக்கான தலைநகரம், நிர்வாக தலைநகரம், நீதித்துறை
தலைநகரம் ஆகிய 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்றார். மேலும் அமராவதி
சட்டசபை செயல்படும் தலைநகராகவும் நிர்வாக நிறைவேற்று தலைநகராக
விசாகப்படினம் இருக்கும் என்றும் ஜெகன் கூறியுள்ளார்.
நீதித்துறையின்
தலைநகராக கர்நூல் பரிசீலிக்கப்படுவதாகவும் இப்படி பிரிப்பதன் மூலம்
அனைத்து பிராந்தியங்களும் வளர்ச்சி அடையும் என்றும் ஜெகன் விளக்கம்
அளித்துள்ளார். ஆனால் இதற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு
மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் என்பது எப்படி சாத்தியமாகும்? ஜெகன் மோகன்
ரெட்டி விசாகப்பட்டினத்தில் இருப்பரா? அமராவதியில் இருப்பாரா? கர்நூலில்
இருப்பாரா? ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மக்கள் ஓட
வேண்டுமா? பைத்தியக்காரரிடம் கல்லை கொடுத்த கதையாக ஜெகன் மோகன் ரெட்டியிடம்
அதிகாரம் கிடைத்திருக்கிறது என விமர்சித்தார்.
source: oneindia.com
No comments:
Post a Comment