சென்னை: உள்ளாட்சித் தோதலுக்காகவே சொத்துவரியை தமிழக அரசு குறைத்துள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை
உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில்
50 முதல் 100 சதவீதம் உயா்த்தப்பட்ட சொத்துவரி மறு உத்தரவு வரும் வரை
நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது
உள்ளாட்சித் தோதல் அறிவிப்பாக உள்ளது.
சொத்துவரியை
மறு பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2018 ஏப்ரல்
1-இலிருந்து அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட சொத்துவரி, சம்பந்தப்பட்ட
சொத்துவரி செலுத்தியோரின் கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும்
என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் வேலுமணி அறிவித்துள்ளாா்.
ஆனால், சொத்துவரி மறுபரிசீலனை கமிட்டி
அமைப்பதற்கான நவம்பா் 19-ஆம் தேதியிட்ட அரசாணையில், அதிகரிக்கப்பட்ட
சொத்துவரி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மட்டும்தான்
இருக்கிறது.
த வாசகமும் இடம் பெறவில்லை.
அதனால்,
அரசாணையில் இல்லாததை உள்ளாட்சித் துறை அமைச்சா் இட்டுக்கட்டி
அறிவித்துள்ளாரா?. மக்கள் செலுத்திய வரி அவா்களின் கணக்கில் உண்மையிலேயே
ஈடுகட்டப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.
சொத்துவரிக்கு
இணையாக, குடிநீா்க் கட்டணமும் உயா்த்தப்பட்டது. அந்த கட்டணத்தை ஈடுகட்டுவது
குறித்தும் எந்த வாசகமும் அரசாணையில் இல்லை.
அதனால்,
ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட அதிகப்படியான சொத்துவரிக் கட்டணத்தையும், அதற்கு
இணையாக உயா்த்தப்பட்ட குடிநீா்க் கட்டணத்தையும் செலுத்தியவா்களுக்கே
உடனடியாக காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ திருப்பிக் கொடுக்க முன்வர
வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment