மும்பை: சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய
மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் இன்று ஆட்சியமைக்கின்றன.
சிவசேனாவின் உத்தவ் தாக்ரே முதல்வராகிறார். தாக்ரே குடும்பத்திலிருந்து
முதல்வராகும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதில்
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மதசார்பற்ற கட்சிகளாகவும்,
சிவசேனா, இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சியாகவும் அறியப்பட்டு வருகிறது.
எனவே இது ஒரு பொருந்தா கூட்டணி என்றும், காங்கிரசுக்கு இதில் விருப்பம்
இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அஜித் பவார், பட்னவிஸ் இணைந்து
ஆட்சியமைத்து 3 நாட்களுக்கு நடத்திய குளறுபடியால், இந்த விவகாரம் இப்போது
மறந்து போய்விட்டது.
காங்கிரசும், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக்
கொண்டது. இத்தனைக்கும், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி என்பது சமீபத்தில்
நடப்பது கிடையாது. இந்திரா காந்தி காலத்திலேயே, இருவரும் மகாராஷ்டிராவில்,
தாய்-குழந்தை போன்ற உறவுடன் இருந்தவர்கள்தான்.
இருப்பினும்,
1990களுக்கு பிறகு, சிவசேனா தீவிர இந்துத்துவா கட்சியாக உருவெடுத்தது.
எனவே, காங்கிரஸ் இன்னும் கூட சிவசேனா கூட்டணியில் ஒரு தயக்கத்தோடையே
தொடருகிறது.
இந்த நிலையில்தான், உத்தவ் தாக்ரே பதவியேற்பு விழாவில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை
என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும்,
உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க உள்ளதால், சோனியா காந்தி,
அவருக்கு கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்தார். தாக்கரேவுக்கு எழுதிய
கடிதத்தில், உத்தவ் தாக்ரே, அவர், வாழ்க்கையில் மிகச் சிறந்தவற்றை பெற்று
வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். புதிய அரசு, மகாராஷ்டிரா மக்களின்
நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கூட்டணி ஆட்சி
சிறப்பாக நடைபெற குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று
தலைவர்களிடையே பேசி முடிவெடுக்கப்பட்டு, மதச்சார்பின்மை உள்ளிட்ட
அம்சங்களுடன், குறைந்தபட்ச செயல் திட்டம் இன்று வெளியிடப்பட்டது.
source: oneindia.com
No comments:
Post a Comment