மும்பை: பாஜகவிற்கு பலன் அளிக்கும், பாஜகவை ஆட்சியில் அமர்த்தும்
எந்த ஒரு காரியத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று சிவசேனா - தேசியவாத
காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று உறுதிமொழி எடுத்தனர்.
இன்று
மும்பையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
அணிவகுப்பு நடத்தினார்கள். மொத்தம் 162 எம்எல்ஏக்கள் ஒன்றாக சேர்ந்து
மக்கள் முன்னிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றி அணிவகுப்பு
நடத்தினார்கள்.
மகாராஷ்டிராவில்
எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கலாம். இந்த நிலையில்
சிவசேனா கூட்டணி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த அணிவகுப்பை
நடத்தியது.
இந்த நிலையில், இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில்
சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் ஒன்றாக
சேர்ந்து உறுதிமொழி எடுத்தார்கள். சிவசேனா அமைக்க போகும் ஆட்சிக்கு நாங்கள்
ஆதரவு அளிப்போம்.
எங்கள் பக்கம்தான் மெஜாரிட்டி எம்எல்ஏக்கள்
இருக்கிறார்கள். நாங்கள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது
சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறும் வகையில், நெஞ்சில் கை
வைத்து இவர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
அவர்கள் தங்கள்
உறுதிமொழியில், சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தியின்
தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம். நாங்கள் கட்சிக்கு நேர்மையாக
இருப்போம். எங்களை யாரும் கவர்ந்து செல்ல முடியாது.
பாஜகவிற்கு
பலன் அளிக்கும், பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் எந்த ஒரு காரியத்தையும்
நாங்கள் செய்ய மாட்டோம் என்று இவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இவர்களின்
உறுதி மொழி வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
No comments:
Post a Comment