Latest News

அமைச்சர் சி.வி சன்முகம் அராஜகம்..! கொடிபிடிக்கிறார் எம்.பி லட்சுமணன்!

பேரனாம்பட்டைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணன் ஜெயலலிதாவின் குட்புக்ஸில் இருந்தவர்.அவர் காலத்தில் ( 2013) லட்சுமணன் ராஜ்யசபா எம்.பி ஆனார். விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் அவரே.ஜெயாவின் மறைவுக்குப் பிறகு அமைச்சர் சி.வி சண்முகத்தின் காய்நகர்த்தலால் சசிகலா லட்சுமணனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார். அந்தப் பதவியும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கே வழங்கப்பட்டது . 2019 ஜூலையோடு அவரது எம்.பி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் ஆகிவிட்ட நிலையில் தனக்கு அதில் ஒரு மாவட்டத்துக்கு தன்னை செயலாளர் ஆக்குவார்கள் என்று எதிர் பார்த்தார்.ஒபிஎஸ் மூலமாக முயற்சிகள் எடுக்கவும் செய்திருக்கிறார். ஆனால்,சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வென்றதற்கு தான் மட்டுமே காரணம் என்று அடித்து பேசும் சிவி சன்முகம் தான் மட்டுமே மாவட்டச் செயலாளர் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.

ஆனால்,அமைச்சரைவிட தொண்டர்களிடையே லட்சுமணனுக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று உள்ளூர் இரத்தத்தின் ரத்தங்களே சொல்கிறார்கள். அதனால்தான் அதிமுக தலைமை அவரை மாநில அமைப்புச் செயலாளர் ஆக்கி சமாதானம் செய்கிறது என்கிறார்கள்.இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருவதால், அமைச்சரின் அராஜகப் போக்கு வெற்றியைப் பாதிக்கும் என்கிறார்கள்.
இதே போன்ற ஒரு மோதல் கள்ளக்குறிச்சியிலும் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் ப.மோகனும்,எம்.எல்.ஏ பிரபுவும் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு மல்லுக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.கடலூரை மூன்றாகப் பிரித்தது போல இங்கும் செய்யலாம் என்பதே மூத்த நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.

வடக்கு உனக்குத் தெற்கு எனக்கு என்று பிரித்துக்கொண்ட ஒபிஎஸ்ஸும் எடப்பாடியும் இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இதற்குத் தீர்வு காண்பார்களா!?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.