ராய்கஞ்ச்: மேற்கு வங்க மாநிலத்தில்,
வரதட்சிணைக் கொடுக்காததால் கர்ப்பிணியைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக
வெட்டி வீசிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு
தினாஜ்புர் மாவட்டத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த
சம்பவத்தில், கொல்லப்பட்ட சபீனா கதுனின் கணவர் ரஹ்மான் உட்பட 3 பேருக்கு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து சபீனாவின் தந்தை அளித்த புகாரில், ரஹ்மான் - சபீனா திருமணத்தின்
போது வரதட்சிணையாக ரூ.8 லட்சம் பணமும், 50 கிராம் தங்க நகைகளும்
கொடுக்கப்பட்டது. அப்போது ரஹ்மான் பள்ளி ஆசிரியராக இருந்தார்.
திருமணம் முடிந்த 6 மாதத்தில், மேலும்
ரூ.5 லட்சம் வரதட்சிணை வேண்டும் என்று கேட்டு மகளைக்
கொடுமைப்படுத்தினார்கள். அதனை கொடுக்க முடியாததால், கடந்த 2005ம் ஆண்டு
செப்டம்பர் 23ம் தேதி சபீனாவை, அவரது கணவர் மற்றும் மூன்று பேர் சேர்ந்து
கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, ராய்கஞ்ச், கலியாகஞ்ச் உள்ளிட்ட
பகுதிகளில் வீசிவிட்டனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
No comments:
Post a Comment