மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன்
அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ அஜித் பவார் சந்திப்பு நடத்தினார். சரத் பவார்
இல்லத்தில் இரண்டு தலைவர்களும் திடீர் சந்திப்பு நடத்தினர்.
இன்று
மதியம் திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் பதவியில் இருந்து
அஜித் பவார் ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களை சொல்லி அவர் துணை
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து
அம்மாநில முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். இதனால்
மகாராஷ்டிரா அரசியலில் மாபெரும் திட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு நாளை சிவசேனா
கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
ஆலோனை
என்ன ஆலோசனை
என்ன ஆலோசனை
மும்பை: சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
நாளை இந்த கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இன்று மாலை
ஆலோசனை கூட்டம் நடந்தது. மூன்று கட்சியை சேர்ந்த தலைவர்களாக உத்தவ்
தாக்கரே, சரத் பவார், அசோக் சவான், சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே, சில
முக்கிய எம்எல்ஏக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
என்ன
வருகை
வருகை
சிவசேனா
- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிருப்தி
எம்எல்ஏ அஜித் பவார் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வந்தது. ஆனால் அவர்
இதில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் தன்னுடைய தம்பி வீட்டில் தன்னுடைய
உறவினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அழைப்பு
என்ன அழைப்பு
என்ன அழைப்பு
கடந்த
3 நாட்களாக பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் அஜித் பவார் மீண்டும்
திரும்பி வர வேண்டும் என்று சரத் பவாரின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்று
வந்தனர் . அஜித் பவார் மீண்டும் எங்களுடன் இணைந்தால் நாங்கள் சேர்த்துக்
கொள்வோம் என்று குறிப்பிட்டனர்.இதற்காக சரத் பவாரின் நெருங்கிய உறவினர்கள்
சிலர் ஏற்கனவே அஜித் பவாரிடம் போன் செய்து பேசி இருக்கிறார்கள்.
வரவேற்பு
என்ன வரவேற்பு
என்ன வரவேற்பு
இந்த
நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன்
அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ அஜித் பவார் சந்திப்பு நடத்தினார். சரத் பவார்
இல்லத்தில் இரண்டு தலைவர்களும் திடீர் சந்திப்பு நடத்தினர். இதன் மூலம்
மீண்டும் இவர் என்சிபி தலைவர்களுடன் இணைய உள்ளார்.
பேசினார்கள்
என்ன பேசினார்கள்
என்ன பேசினார்கள்
இவர்கள்
இருவரும் குடும்பம் பிரச்சனை, கடந்த 3 நாட்களில் நடந்த அரசியல் சிக்கல்கள்
குறித்து பேசியதாக தெரிகிறது. அஜித் பவாரை மன்னித்து சரத் பவார்
ஏற்றுக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள். இதனால் கட்சியில் அவர் மீது
நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.
No comments:
Post a Comment