மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குள் என்சிபி, சிவசேனா,
காங்கிரஸ் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு ஆதரவை பெறுமாறு நான்கு பாஜக
தலைவர்களுக்கு உத்தரவு மேலிடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளது என பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில்
சனிக்கிழமையான நேற்று காலை என்சிபி தலைவர்களில் ஒருவரான அஜித் பவார்
உதவியுடன் பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக மிக எளிமையாக
பதவி ஏற்றுக்கொண்டார்.அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றார்.
ஒரு
நாள் இரவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் தேசிய வாத காங்கிரஸ் மற்றும்
சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள தலைவர்கள் மத்தியில்
அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
என்சிபியில் எம்எல்ஏக்கள்
குறிப்பாக
தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளையும் அதன் தலைவர்களையும்
அஜித் பவாரின் திடீர் முடிவு மிகவும் கவலைப்பட வைத்துள்ளது. தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாஜகவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று
அறிவித்துவிட்ட நிலையில் அஜித் பவாருடன் சென்ற எம்எல்ஏக்களும் சரத்பவார்
பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பது பாஜகவுக்கு
கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேதி எப்போது
ஆளுநர்
30ம் தேதி வரை அவகாசம் அளித்தாலும் நாளை உச்ச நீதிமன்றம் அளிக்கும்
தீர்ப்பை பொறுத்து மெஜாரிட்டியை முதல்வர் பட்னாவிஸ் நிரூபிக்க வேண்டிய தேதி
முடிவாக உள்ளது.
நான்கு தலைகள்
இந்நிலையில்
'ஆப்ரேசன் லோட்டஸ்' திட்டத்தை மகாராஷ்டிராவில் பாஜக செயல்படுத்தி உள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர்கள் நாராயன் ரணே,
ராதாகிருஷ்ண விகே பாட்டீல், கணேஷ் நாயக் மற்றும் பாபன்ராவ் பச்புட்டே
ஆகியோரை மேலிடம் நியமித்துள்ளதாக சொல்கிறார்கள்.
ஆதரவு திரட்ட
இவர்கள்
அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத
காங்கிரஸ்(என்சிபி) எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு ஆதரவுதிரட்ட வேண்டும்
என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
ஹோட்டல் மாற்றம்
இதனால்
அதிர்ச்சி அடைந்த என்சிபி தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் ஹோட்டல்
ஹாயத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. முன்னதாக எம்எல்ஏக்கள்
அனைவரையும் ஹோட்டல் ரினையாஸ்சில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
எம்எல்ஏக்களை தக்க வைக்க வேண்டும் என்று கருதி ஹோட்டலை மாற்ற என்சிபி
முடிவு எடுத்துள்ளது.
காங் எம்எல்ஏக்கள்
இதற்கிடையில்,
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான்,
ஜே.டபிள்யூ மேரியட் ஹோட்டலில் தங்கவைக்கப்ட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை
விலைக்கு வாங்க பாரதிய ஜனதா , முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால்
எங்கள் எம்.எல்.ஏக்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று அவர் கூறினர்.
போகமாட்டாங்க
இது
தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிவசேனா மற்றும் என்சிபியின்
எம்எல்ஏக்கள் அப்படியே இருக்கிறார்கள். மெஜாரிட்டியை நிரூபிக்க விஷயத்தை
செயல்படுத்த பாஜக மிகவும் கடினமாக முயல்கிறது மற்றும் எங்கள் எம்எல்ஏக்களை
உடைக்கவும் உச்சநீதிமன்றத்தில் நேரம் பெறவும் முயற்சிக்கிறது. எங்கள்
எம்எல்ஏக்கள் எங்களிடம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். மூன்று
கட்சிகளிலிருந்தும் யாரும் பாஜகவுக்கு செல்ல மாட்டார்கள்" என்று அசோக்
சவான் கூறினார்.
No comments:
Post a Comment